பாதுகாப்பானது, தனிப்பட்டது மற்றும் நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய மின்னஞ்சல் சேவை.
Gmail உள்ளடக்கத்தை எந்தவித விளம்பர நோக்கங்களுக்காகவும் நாங்கள் பயன்படுத்துவதில்லை
நீங்கள் அனுப்பும், பெறும் மெசேஜ்கள் அனைத்திற்கும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்க்ரிப்ஷன் முறையை Gmail பயன்படுத்துகிறது. விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்கிக் காட்ட Gmail உள்ளடக்கத்தை ஒருபோதும் நாங்கள் பயன்படுத்துவதில்லை.
தனியுரிமை அறிவிப்பு சேர்க்கப்பட்டுள்ள மின்னஞ்சல்
Gmailலில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களின் மின்னஞ்சல்கள் பாதுகாக்கப்படுகின்றன
ஸ்பேம், மால்வேர், ஆபத்தான இணைப்புகள் ஆகியவை உங்கள் இன்பாக்ஸில் வருவதை 99.9% Gmail தடுக்கிறது.
இணையதளம் குறித்த தனி எச்சரிக்கை ஐகானுடன் கூடிய Gmailலின் ‘முதன்மை’ இன்பாக்ஸ்
ஃபிஷிங்கில் இருந்து பாதுகாக்கும் மிகவும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது
நம்பக்கூடிய வகையில் இருக்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் வரும்போது அதுகுறித்து Gmail உங்களுக்குத் தெரிவிக்கும்.
மஞ்சள் வண்ணப் பாதுகாப்பு மெசேஜுடன் இருக்கும் மின்னஞ்சல்
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களுக்குச் சிறந்து விளங்கும் கட்டுப்பாடுகளை அமைக்கலாம்
இரகசியப் பயன்முறை மூலம் மின்னஞ்சல் உள்ளடக்கம் காலாவதியாகும் நேரத்தை அமைப்பதோடு பெறுநர்கள் மெசேஜ் மூலம் சரிபார்க்குமாறும் அமைக்கலாம். முன்னனுப்புதல், நகலெடுத்தல், பதிவிறக்குதல், அச்சிடுதல் போன்றவைக்கான விருப்பங்களையும் அகற்றலாம்.
நேர நினைவூட்டலும் கடிகார ஐகானும் இருக்கும் மின்னஞ்சல்
தனியுரிமை அறிவிப்பு சேர்க்கப்பட்டுள்ள மின்னஞ்சல்
இணையதளம் குறித்த தனி எச்சரிக்கை ஐகானுடன் கூடிய Gmailலின் ‘முதன்மை’ இன்பாக்ஸ்
மஞ்சள் வண்ணப் பாதுகாப்பு மெசேஜுடன் இருக்கும் மின்னஞ்சல்
நேர நினைவூட்டலும் கடிகார ஐகானும் இருக்கும் மின்னஞ்சல்
Gmail மூலம் பலவற்றைச் செய்திடுங்கள்
எப்போதும் இணைந்திருக்கலாம், எல்லாவற்றையும் சரியாக ஒழுங்கமைக்கலாம்
Chatடைத் தொடங்கலாம், Meet மூலம் வீடியோ அழைப்பில் இணையலாம், ஆவணத்தில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம், இவை அனைத்தையும் Gmailலில் இருந்தே செய்யலாம்.
ஆவணத்தில் பிறருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டே ஒரே திரையில் வீடியோவில் உரையாடும் Gmail Chat வசதி
கூடுதல் பணிகளை விரைவாகச் செய்திடுங்கள்
ஸ்மார்ட் கம்போஸ் போன்ற அம்சங்கள் மூலம் மின்னஞ்சல்களையும் மெசேஜ்களையும் விரைவாக எழுதலாம் என்பதால் உங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்ய அதிக நேரம் இப்போது கிடைக்கும்.
‘ஸ்மார்ட் கம்போஸ் தன்னிரப்பி’ அம்சத்துடன் இருக்கும் புதிய மின்னஞ்சல் சேவை
பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சல்கள் குறித்து இனி கவலையில்லை
எளிய நட்ஜ்கள் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
பின்தொடர்வதற்கான நினைவூட்டல் ஆரஞ்சு வண்ண வார்த்தையில் காட்டப்படும் Gmail இன்பாக்ஸ்
ஆவணத்தில் பிறருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டே ஒரே திரையில் வீடியோவில் உரையாடும் Gmail Chat வசதி
‘ஸ்மார்ட் கம்போஸ் தன்னிரப்பி’ அம்சத்துடன் இருக்கும் புதிய மின்னஞ்சல் சேவை
பின்தொடர்வதற்கான நினைவூட்டல் ஆரஞ்சு வண்ண வார்த்தையில் காட்டப்படும் Gmail இன்பாக்ஸ்
ஆப்ஸ் மூலம் Gmailலைப் பயன்படுத்துவது சிறந்தது
ஈமோஜிகள் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
ஈமோஜி ரியாக்ஷன்கள் என்பது மின்னஞ்சல்களுக்கு வேகமாகவும் வேடிக்கையாகவும் பதிலளிப்பதற்கான ஒரு வழி, இந்த அம்சம் Gmail ஆப்ஸில் மட்டுமே கிடைக்கும்.
இந்த அம்சம் அக்டோபர் 2023 முதல் வெளியிடப்படும்.
உங்கள் மின்னஞ்சல்களை வேகமாகக் கண்டறியுங்கள்
குழுவிற்கு ஹெலெனை வரவேற்கும் மின்னஞ்சலைக் காட்டும் ஓர் எளிமையான மொபைல் UI, ஈமோஜி மூலம் எளிதாகப் பதிலளிக்கலாம் என்பதைப் பெரிதாக்கப்பட்ட ஈமோஜி பட்டி குறிக்கிறது.
‘பதிலளி’ என்று தேடல் பட்டியில் டைப் செய்யப்பட்டுள்ளதைக் காட்டும் எளிமையான மொபைல் UI, முடிவுகள் கீழுள்ள சொற்றொடரைக் கொண்டுள்ளன.
கணக்குகளுக்கு இடையே மாறுதல்
வெவ்வேறு வழங்குநர்களின் மின்னஞ்சல்கள் அனைத்தும் ஒரே ஆப்ஸில்.
‘கணக்கைச் சேர்’ என்ற தலைப்பையும் Gmail ஆப்ஸில் வெவ்வேறு மின்னஞ்சல் வழங்குநர்களையும் எளிதாகச் சேர்க்க முடியும் என்பதைக் குறிக்கும் விதமாக வெவ்வேறு மின்னஞ்சல் சேவைகளின் ஐகான்களையும் காட்டும் எளிமையான மொபைல் UI.
‘பதிலளி’ என்று தேடல் பட்டியில் டைப் செய்யப்பட்டுள்ளதைக் காட்டும் எளிமையான மொபைல் UI, முடிவுகள் கீழுள்ள சொற்றொடரைக் கொண்டுள்ளன.
‘கணக்கைச் சேர்’ என்ற தலைப்பையும் Gmail ஆப்ஸில் வெவ்வேறு மின்னஞ்சல் வழங்குநர்களையும் எளிதாகச் சேர்க்க முடியும் என்பதைக் குறிக்கும் விதமாக வெவ்வேறு மின்னஞ்சல் சேவைகளின் ஐகான்களையும் காட்டும் எளிமையான மொபைல் UI.
உங்கள் சாதனத்தில் Gmailலின் சிறந்த அம்சங்களைப் பயன்படுத்துங்கள்
பிற கருவிகளிலும் வேலை செய்யும்
Microsoft Outlook, Apple Mail, Mozilla Thunderbird போன்ற டெஸ்க்டாப் கிளையன்ட்களிலும் Gmail நன்றாக இயங்கும். தொடர்பு, நிகழ்வு ஆகியவற்றை ஒத்திசைக்கும் வசதியும் இதில் அடங்கும்.
ஆஃப்லைனிலும் சிறப்பாகப் பணிபுரியலாம்
இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் ஆஃப்லைன் Gmail மூலம் Gmailலில் மெசேஜ்களைப் படிக்கலாம், அவற்றுக்குப் பதிலளிக்கலாம், அவற்றை நீக்கலாம், தேடலாம்.
எந்தச் சாதனத்திலும் Gmailலைப் பயன்படுத்தலாம்
எங்கிருந்தும் Gmailலை எளிதாகப் பயன்படுத்தலாம்.
Gmail இப்போது Google Workspaceஸின் ஒரு பகுதியாகும்.
எந்தச் சாதனத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் ஒரே இடத்தில் விரைவாக இணைந்து பணியாற்றலாம்.
Google Workspace என்பது பணிச் செயல்திறனை அதிகரிப்பதற்கும், கூட்டுப்பணி செய்வதற்கும் உதவும் கருவிகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இதன்மூலம் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் பிசினஸ்கள் அனைத்து விஷயங்களிலும் முதன்மையாகச் செயல்படலாம். இது உங்களுக்குப் பிடித்த Gmail, Calendar, Drive, Docs, Meet போன்ற பல ஆப்ஸை உள்ளடக்கிய பிசினஸ் அல்லது தனிநபர் பயன்பாட்டிற்கு இணக்கமான மற்றும் புதுமையான தீர்வாகும்.
கேள்விகளுக்கான பதில்களை அறிக
மேலும் உதவி தேவையா?
புதிய மற்றும் அனுபவமிக்க பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகளையும் படிப்படியான வழிகாட்டல்களையும் பாருங்கள்.
எனது மின்னஞ்சல்களைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் Gmail எப்படி வைக்கிறது?
வலுவான பாதுகாப்பு எப்போதுமே Gmailலின் அடித்தளமாக இருந்து வந்துள்ளது. மின்னஞ்சல்கள் உங்கள் இன்பாக்ஸிற்கு வருவதற்கு முன்னரே ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர் போன்றவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்க பணியாற்றுகிறோம். AI மூலம் மேம்படுத்தப்பட்ட ஸ்பேம்களை வடிகட்டும் அம்சங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏறக்குறைய 1 கோடி ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தடுக்கின்றன.
விளம்பரங்களைக் காட்டுவதற்கு எனது மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறீர்களா?
இல்லை. நீங்கள் கட்டணமின்றிப் பயன்படுத்தும் Gmail கணக்கில் விளம்பரங்கள் காட்டப்பட்டாலும் உங்கள் மின்னஞ்சல்கள் தனிப்பட்டதாகவே இருக்கும். விளம்பரத் தேவைகளுக்காக Gmail உள்ளடக்கத்தை Google ஸ்கேன் செய்வதோ செயல்படுத்துவதோ கிடையாது.
எனது மின்னஞ்சல்களைக் கூடுதல் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வது எப்படி?
பெரும்பாலான பயனர்களுக்கு Gmailலின் அம்சங்கள் பாதுகாப்பானவையாக இருந்தாலும் சில கணக்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் தேவைப்படலாம். ஆன்லைனில் இலக்கு வைத்துத் தாக்கப்படும் ஆபத்துள்ள, அதிகத் தெரிவுநிலை மற்றும் பாதுகாக்க வேண்டிய தகவல்களைக் கொண்டிருக்கும் பயனர்களை Googleளின் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் பாதுகாக்கிறது.
மேலும் அறிக
பணி அல்லது பிசினஸிற்காக Gmailலைப் பயன்படுத்த வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
Google Workspaceஸின் ஒரு பகுதிதான் Gmail, இங்கே தேர்வுசெய்யப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. Gmailலில் உங்களுக்குப் பிடித்த அம்சங்களுடன் கூடுதலாக, பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி (@yourcompany.com), வரம்பற்ற குழு மின்னஞ்சல் முகவரிகள், 99.9% தொடர்ந்து இயங்கும் உத்திரவாதம், தனிப்பட்ட Gmailலை விட இருமடங்கு அதிகச் சேமிப்பிடம், விளம்பரமில்லாச் சேவை, 24/7 ஆதரவு, Microsoft Outlookகில் Google Workspace ஒத்திசைவு மற்றும் பலவற்றைப் பெறலாம்.
மேலும் அறிக
மேலும் உதவி தேவையா?
புதிய மற்றும் அனுபவமிக்க பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட உதவிக்குறிப்புகளையும் படிப்படியான வழிகாட்டல்களையும் பாருங்கள்.
இது எப்படி முடிந்தது
என உலகிற்குக் காட்டுங்கள்.
புதிய அம்சங்கள் நிறைந்த Gmailலைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
கிடைமட்டமாக அடுக்கப்பட்டு பெரிதாக்கப்பட்ட செயல்பாட்டு ஐகான்கள் உள்ள Gmail இன்பாக்ஸ் திரை